தொடரும் ஆவா குழுவினரின் அட்டகாசம்! நேற்றும் யாழில் பதற்றம்

யாழ். மானிப்பாய் பகுதியில், செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நேற்று மதியம் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் முகங்களை மூடியும் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆவா குழுவிலிருந்து பிரிந்த தனு ரொக் என்பவரது நண்பரின் வீட்டுக்குள்ளேயே ஆவா குழு புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டில் இரண்டாவது முறையாகவும் ஆவா குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின்போது, வீட்டுக்கருகில் மேசன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒருவரே கை மற்றும் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மானிப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.