பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா! தற்போது வெளிவந்த புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது. இன்றும் நாளையும் ஒளிபரப்பாகும் காட்சிகள் இன்று பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடியன்ஸ்கள் பதிவு செய்த டுவீட்டுகளில் இருந்து ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ரித்விகாவிற்கு ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களும் ஐஸ்வர்யாவுக்கு 80 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களும் கிடைத்துள்ளதால் ரித்விகாதான் டைட்டில் வின்னர் என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஆபாச உடை அணியாமல், அமைதியாக அதே நேரத்தில் சுற்றி நடப்பதை ஆழமாக கவனித்து வந்த ரித்விகா, டாஸ்க்கின்போது வெற்றியை மட்டுமே மனதில் கொள்ளாமல் உண்மையாகவும் நியாயமாகவும் விளையாடியதாகவும், அவரது நேர்மைக்குத்தான் இந்த டைட்டில் கிடைத்துள்ளதாகவும் டுவிட்டரில் பதிவாகி வருகிறது. பிக்பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.