சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் வட்டுவாகல் தொடக்கம் வண்ணாங்குளம் வரையான கரையோர கிராமங்களில் தேசிய சுனாமி போலி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைதுறைபற்று பிரதேச செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புடன் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேவேளை கரையோரத்தில் உள்ள புதுமாத்தளன், இரட்டைவாய்க்கால் ,கொக்கிளாய் ஆகிய இடங்களில் உள்ள முன் எச்சரிக்கை கோபுரங்களில் இருந்தும் ஒலி எழுப்பப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகை செயற்பாட்டிற்கு ஏராளமான பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.