உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா ஆஸ்திரியா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார். ஆனால் அந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஈஸியாக உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வந்தார்.

anush

பாகுபலி2 வில் கூட அனுஷ்காவின் உடலை ஒல்லியாக காண்பிக்க படக்குழுவினர் பல கோடிகளை செலவு செய்தனர். உடல் பருமனால் அனுஷ்காவிற்கு படவாய்ப்பும் கிடைக்காமல் போனது. மீடியாவை சந்திப்பதை அனுஷ்கா அறவே தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் பழையபடி உடல் எடையைக் கொண்டு வர அனுஷ்கா ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு சென்றுள்ளார்.