யாழ் சாவகச்சேரி மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை இன்றையதினம் சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில், பிரதமரின் வழிநடத்தலில், உள்நாட்டு அலுவலகள் அமைச்சின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெறுவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இன்றைய நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய அடையாள அட்டை, பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நடமாடும் சேவை நாளையதினம் சங்கானையிலும், நாளை மறுதினம் ஊர்காவற்துறையிலும் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை காரைநகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.