யாழில் பாட்டிக்கு எமனாக வந்த பிட்டு!!

பிட்டினை உணவாக உட்கொண்ட 74 வயது வயோதிபப் பெண்மணியொருவர் பிட்டுத் தொண்டையில் சிக்கியமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(27) யாழ். மீசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

74 வயதான குறித்த வயோதிபப் பெண்ணுக்கு காலை உணவாகப் பிட்டினை உட்கொண்டுள்ளார். இந்நிலையில் பிட்டு உட்கொண்ட சிறிது நேரத்தில் மூச்சு விடுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.