உலக சைவத் திருச்சபை அமைப்பு யாழ்ப்பாணத்தில்

உலகச் சைவத் திருச்சபை அமைப்பினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சைவசமயத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பான களஆய்வினை மேற்கொண்டிருந்தனர். உலகச்சைவத் திருச்சபை அமைப்பின் தலைவரும் கல்விராஜாங்க அமைச்சருமான இராதகிருஸ்ணன் மற்றும் உலகச்சைவத் திருச்சபை அமைப்பின் முக்கிய பிரமுகரும் தொழிலதிபருமான சிவராசா ஆகியோருடன் யாழ்ப்பாணத்திற்கான திருச்சபை அமைப்பாளர் சுகுனலிங்கம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவசமயத்தில் ஈடுபடு கொண்டவர்களும் இக் களஆய்வில் கலந்து கொண்டிருந்தனர்.