திலீபனின் நினைவேந்தலை புறக்கணித்த விக்னேஸ்வரன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. 

எனினும், மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற தேசிய சுற்றுலா நிகழ்வில் பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டார்.

தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் உள்ள தூபியில் இடம்பெற்றது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர்ன கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, வடக்கு மாகாண சுற்றுலாத்து அமைச்சராக உள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது பணியகத்தினால் நடத்தப்பட்ட சுற்றுலா தின நிகழ்வு கண்காட்சிக் கூடத்தை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.