முல்லைத்தீவில் நடந்த அசம்பாவிதம்! இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

முல்லைத்தீவு, மாங்குளம் மல்லாவி பகுதியில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பத்தில் 28 வயதான உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 25 வயதான இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிதிவெடி அகற்றும் டேஷ் என்ற தனியார் நிறுவனமொன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த பத்மநாதன் திலீபன் என்ற உயிரிழந்த நிலையில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த ஆர்.நிதர்ஷன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.