இந்த வார நாமினேஷன் பட்டியலில் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. நாமினேட் செய்ய விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக நாமினேஷன் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டும். அந்த குற்றச்சாட்டை நாமினேஷன் செய்யப்பட்டவர் மறுத்து தன்மீதுள்ள தவறான புரிதலை திருத்த முயற்சிக்கலாம்.

அந்த வகையில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன், விஜயலட்சுமி ஆகிய ஐவர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். தலைவர் என்பதால் யாஷிகா நாமினேஷன் பட்டியலில் இல்லை. அதேபோல் பாலாஜி, ரித்விகா இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தனர்.

இந்த வாரம் ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின் நாமினேஷன் பட்டியலில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவரை வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யாவை வெளியேற்றிவிட்டால் யாஷிகா பலவீனமடைந்துவிடுவார் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.