சாவகச்சேரி நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் மூவர் கைது

சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள செங்கடகல பினான்ஸ் நிறுவனத்தில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவரது காதலன் என அறியப்படும் இளைஞன், மற்றொருவரும் உள்ளிட்ட மூவர் இன்று கைதாகியுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.

வழமை போன்று காலை நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக தயாரான நிலையில் அங்கு கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றனர்.

இந்நிலையில் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.