தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தலை நடத்த நீதிமன்றம் பச்சை கொடி

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபன் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் சதீஸ்தரன் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி யாழ் பொலிஸாரால் யாழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதவான் பொலிஸாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.