இப்படி செஞ்சா ஜெயிக்க மாட்டாங்களா சமந்தா!

திருமணத்துக்கு பின்பும் சமந்தாவின் மார்க்கெட் தாருமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம்  அவர் உடலை பிட்டாக வைத்துக்கொள்வது காரணம் என்பது வீடியோவில் தெரியவந்தள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பலரின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிப்பை கைவிட்டு விடுவார்கள். சிலருக்கு மார்கெட் குறைந்துவிடும்.  ஆனால் நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிந்த பின் அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி வருகின்றன. இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. யூடர்ன், சீமராஜா  என அடுத்து அவர் நடிப்பில்  வெளி வர உள்ளது.