வவுனியாவில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியாவில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் சென்ற வேளை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா பேருந்து நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், மஹியங்கனை பகுதியை சேர்ந்த 33 மற்றும் 29 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்படவுள்ள நிலையில், வவுனியா காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.