ரஜினியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் தான் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு ‘ரஜினி முருகன்’ பெயரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. தற்போது ரஜினியை பற்றி மேலும் சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான். என் வாழ்க்கையில் என் அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். தற்போது ரஜினி நடிக்கும் படங்களான ‘கபாலி’, ‘2.ஓ’ படங்கள் வெளியாகும் போது எங்கிருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன்’ என்றார்.