மரண வீட்டில் 'காட்' விளையாடிய இருவர் பலி; மூவர் வைத்தியசாலையில்

வாகன விபத்தில் மரணமடைந்த மொரட்டுவை கோரளவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் மரண வீட்டுக்கு அருகில் 'காட்' விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வீதியில் சென்ற வான் மோதியதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த வீதியில் பயணித்த வானே வீதியை விட்டு விலகி இவர்கள் மீது மோதியுள்ளது.

அதனையடுத்து வான் சாரதி மீது அங்கிருந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/162850/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-#sthash.Qp4OjlDS.dpuf