யாழில் முக்கிய இடங்கள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேலை ஆரம்பம்!

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், உள்ளிட்ட சில பிரதேசங்கள் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் 4 இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், வசாவிளான் மற்றும் குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டிடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் விடுவிக்கப்படவுள்ளது.

இதற்கான அறிவித்தல் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டடங்கள் எம்மிடம். கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.