யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய பொருள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 6000 போதை மாத்திரைகள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன.

ட்ரெமடோல் என்ற 6000 போதை மாத்திரைகளுடன் ஜாஎல பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படைப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த போதை மாத்திரைகள் மீக்கப்பட்டுள்ளன.

இந்த போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ஆறு மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை இருந்து போதை மாத்திரை கொழும்பிற்கு கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.