தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்ந்து 5 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளது. 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இன்றையதினம் காலை குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.