முல்லைத்தீவில் சில வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் நேற்று சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

மிதிவெடி அகற்றும் படையினருக்கு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5 ரங்கன் பூஸ்டர்ஸ், 92 ஜொனி மிதிவெடிகள் மற்றும் 42 நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை மன்னார் பரப்பு கடந்தான், திருக்கேதீஸ்வரம், பரசன்குளம் மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து இருந்தும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் குறிப்பிட்டுள்ளனர்.