ஜோக்கர் மன்னனின் 'வஞ்சகர் உலகம்' செப்- 7ம் தேதி ரிலீஸ்

ஜோக்கர் திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்த குரு சோமசுந்தரம் நடித்துள்ள வஞ்சகர் உலகம் திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

'ஆரண்ய காண்டம்', 'ஜோக்கர்' போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் குரு சோமசுந்தரம். இவர் நடித்த 'ஜோக்கர்' படத்தின் மன்னர் மன்னன் கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் இவர் நடிக்கும் 'வஞ்சகர் உலகம்' என்ற திரைப்படம் வருகின்ற 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.

மனோஜ் பீதா இயக்கியிருக்கும் இப்படத்தை லேபிரின்த் பிலிம் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வஞ்சகர் உலகம் பட டிரைலர் முன்னதாகவே வெளியாகியிருந்து. தற்போது இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.