இத்தனை அன்பா! சாய் பல்லவி நெகிழ்ச்சி

மலர் டீச்சராக பிரேமம் படத்தில் அறிமுகம் ஆனவர் சாய்பல்லவி. இந்த படம் மிக பயங்கர ஹிட். தொடர்ந்து மலையாளத்தில் படங்களில் நடித்த அவர், தெலுங்குகில் பானுமதி என்ற கேரக்டரில் பிதா படத்தில் நடித்தார். இதுவும் சூப்பர் ஹிட். 

தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் சாய்பல்லவி பிரபலமானர். இவர் கடைசியாக தெலுங்கு நடிகர் நாக சௌரியாவுடன் கரு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு திறனை கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். 

தற்போது சாய் பல்லவி சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இயல்பான அழகு மற்றும் எதார்த்தமான நடிப்பால்  பலரையும் சாய் பல்லவி கவர்ந்து விட்டார். இதனால் டுவிட்டரில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

10 லட்சம் பேர் என் மேல் அன்பு கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைவருக்கம் நன்றி என்றும் சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.