கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது!

பெண் விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

திருமலையில் கரையொதுங்கிய தமிழ் பெண் விரிவுரையாளரின் சடலம் தொடர்பில் அதிரடி உத்தரவு திருகோணமலை..

சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய பெண் விரிவுரையாளரின் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளன,

திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனபெண்ணின் சடலம் அவரின் கணவரினால் இதன் போது அடையாளங்காணப்பட்டுள்ளது,

அத்துடன் நீதவான் குறித்த பெண் விரிவுரையாளரின் உறவினர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளனர் இந்த விசாரணைகளின் போது பெண்ணின் மரணம் குறித்து எந்த விடயத்தையும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரது பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவரின் ஊடாக இடம்பெற வேண்டும் என நீதவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவர் உள்ள வைத்தியசாலையொன்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை பெற்றுத் தர முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குடும்பத்தினர் வைத்தியசாலையொன்றை தெரிவிக்க தவறும் பட்சத்தில் வைத்தியசாலையொன்றை தெரிவு செய்து நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறு திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டார்

அதுவரை சடலத்தை திருகோணலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்,

உறவினர்கள் சடலத்தை கையேற்ற போதிலும் அதனை எரிக்கக் கூடாது புதைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்,

மேலும் மரணம் மீதான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நடை பெறும்