யாழில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்! சோகத்தில் குடும்பம்!

வேகமாக வந்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் புத்தூர் மீசாலை முதன்மைச் சாலையில் இடம்பெற்றது.புத்தூர் ஊற ணிப் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் மோகன் (28) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

ஈருருளியின் பின்புறமாக உந்துருளி மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்த குடும்பத் தலைவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன் போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.உந்துருளிச் சாரதியும் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் புத்தூர் மீசாலை முதன்மைச் சாலையில் இடம்பெற்றது.புத்தூர் ஊற ணிப் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் மோகன் (28) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்