மாந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்கொலை சம்பவம்!! யாழ் மேலதிக அரச அதிபர் மறுக்கின்றார்!

மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளி வந்த செய்தியில், தன்னுடன் சண்டை பிடித்துவிட்டே கஜன் தற்கொலை செய்தார் என்பது முற்றிலும் தவறானது என யாழ் மேலதிக அரசஅதிபர் சுகுனவதி செய்வேந்திரம் மறுத்துள்ளார். வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பாக இன்று சுகுனவதி செய்வேந்திரத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கஜன் தற்கொலைக்கு முயன்றது திங்கட்கிழமை எனவும் ஆனால் ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் புதன் கிழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அத்துடன் கஜன் யார் என்றே தனக்குத் தெரியாது எனவும் அவரை தான் சந்திக்கவில்லை எனவும் சுகுனவதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். இதே வேளை முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயற்படும் ஒரு உத்தியோகத்தர் எவ்வாறு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இடமாற்றம் தொடர்பாக கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் சுகுனவதி தெய்வேந்திரம் அவர்கள் வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளருக்கு கொடுத்த தகவலையும் அவரது கருத்தாக நாம் இங்கு வெளியிட்டுள்ளோம்.