கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகரை பதவி உயர்த்துமாறு கண்டிப்பான உத்தரவு!

கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிரிவர்த்தனவை பதவி உயர்த்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் 5 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எனினும், அவர் பொலிஸ் அத்தியட்சகர்களான பாலித சிரிவர்த்தன மற்றும் காமினி பெரேரா இருவரையும் பதவி உயர்த்துவது தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந் நிலையில் கடந்த மே மாதம் பொலிஸ் ஆணைக்குழு நேரடியாக தலையிட்டு பாலித சிரிவர்த்தன தவிர்ந்த ஏனைய 4 பேரையும் பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சியில் பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றும் பாலித சிரிவர்த்தனவுக்கு மட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி உயர்வு வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் முட்டுக்கட்டையாக செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரையும் பதவி உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.