கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் மோட்டார்சைக்கிளில் சிக்கிய கைத்தொலைபேசி! கைதுகள் தொடருமா?

கிளிநொச்சியில் நித்தியகலா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நித்தியகலாவின் மோட்டார்சைக்கிள் மற்றும் அதன் சாவி என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மோட்டார்சைக்கிளில் கைத்தொலைபேசியொன்று காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கைத்தொலைபேசி உயிரிழந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது. 

அத்துடன், சந்தேகநபரின் காற்சட்டையிலிருந்து சிம் அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அது யாருடையது என்ற தகவல் வெளியாகவில்லை.

குறித்த கொலை தொடர்பில் தொடர்ச்சியாக தடயப் பொருட்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்துடன் வேறு நபர்கள் தொடர்புப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கிளிநொச்சியில் குறித்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் போது மேலும் கைதுகள் இடம்பெறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.