யாழில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய திருமணமும், மணமக்களும்

யாழில் பலரின் கவனத்தையும் பெற்ற திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ். கோப்பாயில் இன்று இடம்பெற்ற இந்த திருமணத்தின் போது, வாகனத்திற்கு பதிலாக குதிரை வண்டியில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது குதிரை வண்டியை சூழ மண மக்களின் உறவினர்கள் நடந்து சென்றனர். திருமணத்தின் பின்னர் இணுவிலில் உள்ள ஆலயங்களுக்கு மணமக்கள் குதிரை வண்டியிலேயே அழைத்து செல்லப்பட்டனர்.

அதன் பின்னர், குதிரை வண்டியிலேயே கோப்பாய்க்கும் அழைத்து வரப்பட்டனர்.

சமகாலத்தில் திருமணங்களின் போது வித விதமான நவீன ரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திருமணத்தின் போது குதிரை வண்டி பயன்படுத்தப்படமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.