யாழ்ப்­பாண பொலிசாரின் திடீர் நட­வ­டிக்­கை...

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் காணப்­ப­டும் போக்­கு­வ­ரத்து நெரி­சல்­களை குறைக்க தொடர் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜய­சுந்­தர தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் போக்­கு­வ­ரத்து பிரச்­சி­னை­கள் மற்­றும் விபத்­து­க­ளைத் தடுப்­பது தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலை அடுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­க­ளைப் பகி­ரும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் போக்­கு­வ­ரத்து நெரி­சல்­கள், விபத்­துக்­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். முக்­கிய வீதி­க­ளில் உள்ள குறை­பா­டு­களை ஒளிப்­ப­டங்­க­ளின் ஆத­ரத்­து­டன் உரிய அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

குறிப்­பாக யாழ்ப்­பாண நக­ரின் முதன்மை வீதி­க­ளில் வீதிக் கோடு­கள் உரிய முறை­யில் வரை­யப்­ப­ட­வில்லை. அதி­லும் யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­துக்கு முன்­னாள் உள்ள பாத­சாரி கடவை ஆபத்­தினை ஏற்­ப­டுத்­தக் கூடிய வகை­யில் அமைந்­துள்­ளது.

மண்­ட­பத்­தின் வாச­லுக்கு நேரெ­திரே காணப்­ப­டு­கின்­றது. இத­னால் மண்­ட­பத்­தில் இருந்து வீதிக்கு வரும் சிறு­வர்­கள், பெரி­ய­வர்­கள் திடீ­ரென வீதி­யைக் கடப்­ப­தால் அதிக விபத்­து­கள் அங்கு இடம்­பெ­று­கின்­றன.

எனவே அந்­தக் கட­வையை அந்த இடத்­தில் இருந்து சற்­றுத்­தூ­ரம் தள்ளி மாற்றி அமைக்க வேண்­டும். என வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யைக் கோரி­யுள்­ளேன்.

யாழ்ப்­பாண நக­ரில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் மிகுந்த இட­மாக யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யின் வீதி காணப்­ப­டு­கின்­றது.

அங்கு மூன்று முச்­சக்­கர வண்­டித் தரிப்­பி­டங்­கள் உள்­ளன. முச்­சக்­கர வண்­டி­களை அங்கு நிறுத்­தாது, அங்கு சேவை­யில் ஈடு­ப­டும் சார­தி­க­ளின் தொடர்பு இலக்­கங்­க­ளு­டன் விளம்­ப­ரப் பல­கையை வைப்­ப­தன் ஊடாக வாகன நெரி­ச­லைக் குறைக்க முடி­யும். இதை அவர்­க­ளும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பாண நகர்ப்­பு­றத்­தில் உள்ள சில புடைவை வியா­பார நிலை­யங்­கள் நடை­பா­தை­க­ளில் புடை­வை­யை­யும், பொம்­மை­க­ளை­யும் காட்­சிப் படுத்­து­கின்­றன. இத­னால் நடை­பா­தை­யில் பய­ணிக்க வேண்­டிய மக்­கள் வீதி­யில் நடக்­கின்­ற­னர்.

இத­னால் விபத்து ஏற்­ப­டு­கின்­றது. எனவே அவா­றான கடைக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கையை இனி­வ­ரும் காலங்­க­ளில் எடுப்­போம் என்­றார்.