கிளிநொச்சி நித்தியகலா கொலையில் கைதானவர் வழங்கிய அதிர்ச்சித் தகவல்! கொலையாளி இவரா??

கிளிநொச்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் கைத்தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் தானே கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி குறிப்பிட்டள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை தாமே கொலை செய்ததாக சந்தேகத்துக்குரியவர் ஒப்புக்கொண்டதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கொலையுடன் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்துக்குரியவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என்ற பெண்ணே நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து இரு குழுக்களாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.