இன்று காலையில் தப்பியது யாழ்தேவி

யாழ்தேவியும் மற்றுமொரு புகையிரதமும் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கொழும்பு - சிறிவத்சிபுர பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.

யாழ்தேவி புகையிரத சமிக்ஞையை கவனிக்காமல் பயணித்த போது, அதே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மற்றுமொரு புகையிரதமும் பயணித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து உடனடியாக தகவல் பரிமாறப்பட்டு, யாழ்தேவி பயணித்த தண்டவாளம் மாற்றப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.