கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல்  எடுத்து செல்லப்பட்டு முறிகண்டி சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.