அமெரிக்காவில் யாழ் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் யாழ் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் கடந்த 27.08.2018 அன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு யாழிலிருந்து குடும்பத்துடன் அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தான் மற்றும் இரண்டு பிள்ளைகள் வெளியில் சென்று விட்ட நிலையில் மனைவி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த வேளையில் மனைவி மரணித்த நிலையில் சடலமாக கிடந்ததாகவும் மரணமான 44 வயது பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.