யாழ் முழுவதும் பறக்கவுள்ள சர்வதேச விமானங்கள்

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்த தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கென 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றி அவர் குறிப்பிடுகையில், ஹிங்குராக்கொட விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் இந்த வானூர்தி தளம் சர்வதேச மயப்படும்போது உலகின் பெரும் எண்ணிக்கையான விமானங்கள் யாழ் வானில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.