என்ஜிகே படம் குறித்த திடீர் அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி!

சூர்யா நடித்து வரும் என்ஜிகே இந்த தீபாவளிக்கு வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சிறப்பான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், சூர்யாவை வைத்து என் ஜி கே படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தகர்க்க முடியாத படங்களில் என்ஜிகே படமும் ஒன்று. இந்த திரைப்படம் வரும்  தீபாவளிக்கு வெளியிடப் படும் என்ற படத்தை தயாரித்து வந்த ட்ரீம் வாரியர்ஸ் பட நிறுவனம் கூறியிருந்தது. 

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடையாததால் படத்தை தீபாவளிக்கு திரையிட வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.