தமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி!!

இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பாட்டு பாடுகின்ற வாய்ப்பு சிங்கள யுவதி ஒருவருக்கு கிடைத்து உள்ளது.

பஹ்ரைய்னில் அழகு நிலையம் ஒன்றில் தொழில் பார்ப்பவர் மதுஷா ஜிம்ஹனி. வயது 23. நெருக்கமானவர்களால் குஷி என்கிற பெயரில் அறியப்படுகின்றார்.

இயல்பாகவே வளமான குரல் பெற்ற இவர் சமூக இணைப்பு தளங்கள் மூலம் பாடல்களை பாடி வெளியிட்டு வந்தார்.

இவரின் குரல் இந்திய திரைப்பட இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழ், இந்திய படங்களில் பாட வருமாறு அழைப்புக்கள் கிடைத்து உள்ளன.