87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் - காங்கேசன்துறை கடலில் கடற்படையால் மீட்பு

காங்கேசன்துறை கடற் பரப்பில் மிதந்து வந்த 87 கிலோ 400 கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர். 

கடல் ரோந்து சென்ற கடற் படையினராலேயே மேற்படி கஞ்சா பொதிகள் மீட்

கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்