ஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை!!

காரைநகர், ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்காக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.