வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளை - ஊரெழுவில் அதிகாலை சம்பவம்

கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரெழு அம்மன் கோவிலடியில் 77 வயதுடைய வயோதிபரும் 70 வயதுடைய  அவரது துணைவியாரும் வசித்து வருகின்றனர்.

அவர்களின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் தம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளையர்களின் தாக்குதலால் காயடைந்த வயோதிபத் தம்பதியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.