கிளிநொச்சியில் பாலியல் குற்றச்சாட்டு; தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்

தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற விடியல் தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவயின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்விகற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி என தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து குறித்த நிர்வாகி நேற்று (17.08) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 .08 .2018 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்விகற்று வருகின்ற நிலையில் அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஸ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்பெற்று வந்துள்ளது.

இதற்கு நடவடிக்கை எடுக்க பலரும் முன்வராத நிலையில் கண்டாவளை பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலார் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார்.

எனவே இவாறு தங்களது பிள்ளைகள் எந்த கல்வி நிலையங்களில் கல்வி கற்கின்றார்கள் அவர்களது பாதுகாப்பு எவ்வாறாக உள்ளது.