7 மோட்டார் குண்டுகள் - நாகர்கோவிலில் கண்டுபிடிப்பு

மீள்குடியேற்றம் செய்யப் பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பகுதியில் காணியினை அதன் உரிமையாளர் கடந்த திங்கட்கிழமை சுத்தம் செய்த போது வெடி பொருட்கள் தென் பட்டன. இது குறித்து கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டது. 

கிராம அலுவலர் பருத்தித்துறை பொலிஸாருக்கு உடனடியாக தெரிவித்தும் பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியமே அப் பகுதிக்கு சென்றுள்ளனர். 

அப்பகுதியில் 50 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் ஏழு காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினரினால் அப்பகுதியில் உள்ள வெடிபொருட்கள் அகற்றப்படவுள்ளது.

யுத்த காலத்தில் நாகர்கோவில் பகுதி படை முன்னரங்காக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.