சந்நிதி கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை

யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(16) முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். கரணவாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.பவிந்திரகுமார் (வயது- 55) சந்நிதி முருகன் கோயிலில் வியாபாரம் செய்யவுள்ளதாகக் கூறி கடந்த மாதம்-22 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றுள்ளதாகவும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும் குறித்த குடும்பஸ்தரின் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.