யாழில் வள்ளம் கவிழ்ந்ததில் அலையில் அடித்து செல்லப்பட்ட மீனவர் பலி

கடற்கொந்தளிப்பில் சிக்கி வள்ளம் கவிழ்ந்ததில் அலை யில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர் நேற்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டை சாவ ற்கட்டை சேர்ந்த 6 பிள்ளை களின் தந்தையான முத்துக் குமார் துரைசிங்கம் (வயது 59) என்பவரே மேற்படி உயி ரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மேற்குறித்த நபர் மற்றும் அவருடைய மகன் உட்பட மூன்று பேர் மீன்பிடிப்பதற்காக காக்கைதீவில் இருந்து நாவாந்துறை கடற் பரப்புக்கு வள்ளத்தில் சென்றுள்ளனர்.

அப்போது நாவாந்துறை கடற்பரப்பில் இருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததுடன் கடல் கொந்தழிப்பு ஏற்பட்டது. இதனால் இவ ர்கள் பயணித்த வள்ளம் கடலில்

கவிழ்ந்துள்ளது.

மேற்குறித்த நபருக்கும் அவருடைய மக னுக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் கடலில் வீழ்ந்து தத்தளித்துள்ளார்கள். அப்போது குறித்த நபரை அலை இழுத்து சென்றுள்ளது. மற்றைய இருவரும் வள்ள த்தை பிடித்த படி கரைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

அலையில் அடித்து செல்லப்பட்ட நபரு டைய சடலம் நேற்று அதிகாலை காக்கை தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.