வாழ்வாதாரத்துக்கு வழங்கிய பசு விசமிகளால் கொலை - வடமராட்சியில் சம்பவம்

சமுர்த்தி பயனாளி ஒருவ ரிற்கு வாழ்வாதார உதவி யாக வழங்கப்பட்ட நல்லின பசுமாடு ஒன்று விசமிகளால் இறைச்சியாக்கப்பட்ட சம்பவம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சியின் கப்பூது, அந்தணத்திடலில் வசிக்கும் சி.சுப்பிரமணியம் என்பவ ரது 80 ஆயிரம் ரூபாய் பெறு மதியான பசுவே கொல்லப் பட்டு இறைச்சியாக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை இரவு வீட்டில் கட்டப்பட்டிருந்த பசு

மாடு இரவு காணாமல் போயிரு ந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் தேடிப் பார்த்த போது பற் றைக்கரை ஒன்றில் பசுவின் தலையும், என்பு, குடற்பகுதி என்பன காணப்ப ட்டன.  இதனையடுத்து நெல்லியடி பொலி ஸில் முறையிடப்ப ட்டுள்ளது.