யாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்

நாகபாம்புடன் நபரொருவர் ஓர் இரவு முழுவதும் உறங்கிய சம்பவம் யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(14) இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வழமை போன்று சொகுசு மெத்தையில் குறித்த நபர் படுத்துறங்கியுள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு வேளையில் மெத்தையின் கீழ்ப்புறம் ஏதோ நெளிந்து செல்வது போன்று உணர்ந்துள்ளார். எனினும், அசதியால் அவர் உறங்கி விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று(15) அதிகாலை நான்கு மணியளவில் தனது உடலில் ஏதோ உணரவே திடீரெனக் கண் விழித்துப் பார்த்துள்ளார். இதன் போது அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.

நடுத்தர அளவிலான நாகபாம்பொன்று அவரது வயிற்றுப் பகுதியால் நெளிந்து செல்வது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

எனினும், குறித்த நாகபாம்பு தெய்வாதீனமாக மேற்படி நபரைத் தீண்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.