யாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்!!

                        

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) பணியாற்றும் பெண் உத்தியோகத்தரிடம் சங்கிலி பறிக்கும் முயற்சி அவரின் சாதூரியத்தால் தடுக்கப்பட்டது.

சங்கிலி பறிப்பைத் தடுத்த அந்த பெண் உத்தியோகத்தர் காயமடைந்தார்.இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள மேலதிக நீதிவான் நீதிமன்றில் வரணியைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் கடமையாற்றுகிறார். அவர் பேருந்தில் வந்து யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இறங்கி பழைய பூங்கா வீதி ஊடாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது பின் தொடர்ந்த கொள்ளையர் ஒருவர் நீதிமன்ற உத்தியோகத்தரின் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார். எனினும் அவர் சங்கிலியை கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டதால், கொள்ளையரின் முயற்சி தடுக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற உத்தியோகத்தர் கழுத்துப் பகுதியில் காயமடைந்தார்.