யாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்!! பிருந்தா கூறுகின்றார்

யாழ்ப்­பா­ணத்­தில் சிறு­மி­க­ ளைப் போன்று சிறு­வர்­க ­ளும் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர். அது தொடர்­பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று நல்­லூர் பிர­தேச சபை அமர்­வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

நல்­லூர் பிர­தேச சபை அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் கு.பிருந்தா சிறு­வர்­கள் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­து­வ­தைத் த்டுப்­பது தொடர்­பான பிரே­ரணை ஒன்­றைக் கொண்­டு­வந்­தார். அந்­தப் பிரே­ரணை மீதான விவா­தத் தின்­போது உறுப்­பி­னர் வாசுகி மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டி­னார்.

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைக் கா­ல­மாக அதி­க­ளவு சிறு­மி­கள் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வதை அறிய முடி­கின்­றது. அதைப்­போன்று சிறு­வர்­க­ளும் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர். ஆனால் அந்­தத் தக­வல்­கள் வெளியே வரு­வ­தில்லை.

அவ்­வாறு தெரி­ய­வந்­தா­லும் அதை எவ­ரும் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. பாட­சா­லைச் சிறு­வர்­கள் ஆள்­கள் இல்­லாத இடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்டு துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அறிய முடி­கின்­றது. இவற்­றைத் தடுக்க நாம் உட­ன­டி­யா­கச் செய­லில் இறங்க வேண்­டும். அதற்­கான உபா­யங்­களை வகுக்க வேண்­டும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தக் குற்­றங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த துறை­சார்ந்த அதி­கா­ரி­க­ளை­யும், எமது உறுப்­பி­னர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிக் குழு ஒன்றை அமைப்­போம் என்று தவி­சா­ளர் குறிப்­பிட்­டார்.

இந்­தக் குழு எமது சபைக்­குட்­பட்ட அனைத்து இடங்­க­ளுக்­கும் சென்று விழிப்­பு­ணர்­வுச் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வார்­கள். இந்த விழிப்­பு­ணர்­வுச் செயற்­பா­டு­களை நாம் பாட­சா­லை­யில் மேற்­கொள்­வது எந்­த­ளவு சாத்­தி­யம் என்று தற்­போது கூற­மு­டி­யாது. ஆனால் சமூக அமைப்­புக்­கள் மற்­றும் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளில் மேற்­கொள்ள முடி­யும். அதற்­கான ஏற்­பா­டுள் செய்து தரப்­ப­டும் என்­றும் தவி­சா­ளர் குறிப்­பிட்­டார்.