யாழில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்

வர்த்தக நிலையமொன்றுக்குப் பொருட்கள் வாங்குவதற்காகத் தனித்து நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் பெறுமதியான தங்கச் சங்கிலி மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த இனம் தெரியாத இருவரால் அறுத்தெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(11)பிற்பகல் யாழ்.பருத்தித்துறை மாலுசந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் தலைக்கவசம் அணியவில்லை எனவும் அந்த நபரே தனது தங்கச் சங்கிலியை அபகரித்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் தெரிவித்தார். நான்கு பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த வயோதிபப் பெண் சம்பவம் தொடர்பாக யாழ்.நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.