பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாடிய முடிஞ்சா இவன புடி குழுவினர்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடித்து வரும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக ஊட்டி, வேலூர் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது.

இப்படக்குழுவினர் பொங்கல் திருநாளை முன்னிட்டு படப்பிடிப்பின் இடையே பொங்கல் வைத்து வெகு விமரிசையாக கொண்டாடியிருக்கின்றனர். இதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் சூரப்ப பாபு, நாயகன் கிச்சா சுதீப், நடிகர் ரவிசங்கர், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம், ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அடுத்த வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் இதர வேலைகள் துவங்க உள்ளது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.