யாழ் செம்மணிப் பகுதியில் கள்வர்களால் யுவதி படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

யாழ். செம்மணி வீதியில் பகல்வேளையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்ந வழிப்பறிக் கொள்ளையர்கள் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு இளம் பெண்கள் பயணித்துள்ளனர். இதன்போது பகல் நேரமாக இருந்தபோதும் குறித்த சமயம் வீதியில் யாரும் காணப்படவில்லை.

இந்த நிலையில் மிக வேகமாக ஓர் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துள்ளார்.

இதன்போது நிலை தடுமாறு வீழ்ந்த இரு யுவதிகளும் சுதாகரித்து எழும்புவதனை அவதானித்த வழிப்பறி கொள்ளையர் யுவதியை காலால் உதைத்து வீழ்த்தியுள்ளார். இதனால் மீண்டும் வீழ்ந்த யுவதிகள் காலில் பலமாக அடிபட்டு படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து தங்கச் சங்கிலியை அபகரித்தவர்கள் தமது மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதியை நோக்கி வேகமாகத் தப்பிச் சென்றனர். இதன்போது இரு யுவதிகளும் எழுப்பிய அவலக் குரலையடுத்து அயலவர்கள் கூடி உதவி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேநேரம் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடுகள் பலவற்றில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளமையினால் அதன் உதவியுடன் பொலிசார் கொள்ளையரை இனம்கான முயற்சிக்க வேண்டும். என அப்பகுதியைச் சேர்ந்தோர் தெரிவிக்கின்றனர்.